IMF கடனைப் பெறுவதற்கு இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடு இலகுவானதல்ல என...
பாடசாலை கால அட்டவணையின் பிரகாரம் வழங்கப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்களவு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முன்னுரிமை...
சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில் ஒரு அழகு நிலையம் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
மஸ்கெலியா – பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12) விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவத்தில், மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும், மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்ய நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176...
3 அவது லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் (LPL) எதிர்வரும் ஜூலை 31 திகதி முதல் ஒகஸ்ட் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அமெரிக்கா அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பச்சரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு...