உள்நாட்டு செய்தி
நாட்டு மக்களை பாதுகாப்போம் – கெஹேலிய

நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் முன்நின்று செயற்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொத்மலை பகுதியில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
கிராமிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு எதிர்வரும் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.