உள்நாட்டு செய்தி
சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பிரதிபளிப்பதில்லை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பிரதிபளிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவுத்தினத்தை முன்னிட்டு ஹொரகொல்ல நகரில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மலரஞ்சலி செலுத்தி அங்கிருந்து சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்கவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.