உள்நாட்டு செய்தி
சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் பலி

நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களே கடும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
1,766 குடும்பங்களைச் சேர்ந்த 7,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.