உள்நாட்டு செய்தி
அஸ்வெசும பயனாளிகளுக்கு சதொச மூலம் பாதி விலையில் பொருட்கள்!

புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை 50% தள்ளுபடியில் அதாவது, 2,500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
லங்கா சதொச மூலம் பகுதிகளில் தகுதியான பயனாளிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தத் தள்ளுபடி பொதி வழங்கப்படும்.