உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,18,64,969 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை...
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட அணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி மஹேல ஜயவர்தன உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து...
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் மற்றும் சுங்க பணிப்பாளருக்க பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று (24)...
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை (24) அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற...
முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க 3 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார் குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி...
2 ஆவது லங்கா ப்ரிமியர் லீக் தொடர் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இதில்...
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனை சுட்டிக்காட்டி, 2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார். பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24) ஆரம்பமாக உள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம்...
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் என்ற வகையில் ஆசிரியர்கள்...