Helth
இலங்கைக்கு மூன்று இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் – WHO

COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு விநியோகிக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
AstraZeneca தடுப்பூசிகளை ஆறு மாதங்களுக்கு மாத்திரமே களஞ்சியப்படுத்த முடியும் என்பதால், கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.