Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் போன்ற காய்ச்சல் வைரஸ் பரவுகிறது – பேராசிரியர் ஜீவந்தர

Published

on

 

ஒமிக்ரோன் உப பிரிவான JN-1 இன் மாதிரி பரிசோதனையின் மரபணு பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா போன்ற ஒரு வைரஸ் பரவி வருவதாகவும் அவர்களில் கொவிட் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலம் முழுவதும் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட்டின் JN-1 உப பிரிவு உலகம் முழுவதும் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

மேலும் குளிர்காலம் காரணமாக வைரஸ் பரவுவது துரிதப்படுத்தப்படலாம் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.