Helth
மன்னாரில் கொவிட் நிலவரம்
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை(10) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,.
“மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 288 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தமாக 11 ஆயிரத்து 230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாதம் 683 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தர பரீட்சைகள் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளது.
நாளைய தினம் (11) மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற உள்ள மஹா சிவராத்திரி நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெற உள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.” என அவர் தெரிவித்தார்.