உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு...
புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக...
அத்திலாந்திக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ் மன்னர் நேற்றைய தினம் (27) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னர்...
ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான மின்சார அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (27) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை...
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 10 வேட்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
MI அணியை எளிதில் வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை CSK அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த MI அணியில் ரோஹித்(0), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (29), திலக் வர்மா(31) உட்பட முன்னணி...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று(19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதேநேரம் வேட்புமனுக்கள்...