Helth
மேலும் இரண்டு கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் விபரம்
• பேலியகொட பகுதியில் வசித்த 71 வயதான பெண்
• அத்துருகிரிய பகுதியில் வசித்த 46 வயதான ஆண்
இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இதுவரை 55,526 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.