உள்நாட்டு செய்தி
கொவிட் தடுப்பூசியின் நான்காவது மாத்திரை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு
நான்காவது கொரோனா நோய்த்தடுப்பு தடுப்பூசியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோயியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது. இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய ரீதியில் பரவும் அபாயம் உள்ளதால், தொற்றுநோயியல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதன் பிரதம நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்தார். நாட்டில் கிடைக்கும் ‘Sinofarm’ தடுப்பூசியை எந்தவொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் சென்றால் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறுகிறார். நான்காவது டோஸாக வழங்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியானதால் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால் நாட்டில் சுமார் 26 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.