Connect with us

Uncategorized

கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் கட்டாயத் தேவை நீக்கம் !

Published

on

COVID-19 தொற்றுநோய்களின் போது வெளிநாடுகளுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை முழுமையாக தளர்த்தியுள்ளது.அதன்படி, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் COVID-19 தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டிய தேவை செவ்வாய்க்கிழமை (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.எந்தவொரு விமானப் போக்குவரத்து அல்லது கடல் துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அல்லது வருகையில் Negative கொவிட்-19 பரிசோதனையை (PCR/RAT) தயாரிக்க வேண்டிய அவசியம் இனி தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.வெளிநாட்டுப் பிரஜைகள்/சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்த பிறகு COVID-19 Positive ஆக இருந்தால், அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனை/ஹோட்டல்/குடியிருப்பு இடத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சிகிச்சை/தனிமைப்படுத்துதலுக்கான செலவை வெளிநாட்டினர்/சுற்றுலாப் பயணிகள் ஏற்க வேண்டும்.