ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானின் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளனர்.பிரதமர் குணவர்தன, தூதுக்குழுவை வரவேற்றதுடன், உள்கட்டமைப்பு...
கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தொழில்துறையினருடன் இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.கலந்துரையாடலின் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஒரு கிலோகிராம்...
எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.சமீபத்திய...
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக...
நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி பஸ் கட்டணம் 4.01 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய...
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பல் 163 மீற்றர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ...
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம,...
திருகோணமலை கடற்படை பாலம் (ஜெற்டி) இரண்டாக உடைந்ததில் துறைமுகத்தை பார்வையிடச் சென்ற 19 பேர் காயம்.ஆழம் குறைந்த கடற்பரப்பாக இருந்தமையால் எவருக்கும் உயிர்ச்சேதமில்லை.திருகோணமலையிலிருந்து துறைமுகத்தை பார்வையிடச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பாலம் (ஜெட்டி) இரண்டாக உடைந்ததனால்,அதில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் கோட்டாபய ராஜபக்ச இணைய தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன....