உள்நாட்டு செய்தி
கால்வாயிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
பொரலஸ்கமுவ – பெல்லன்வில, மகரகம வீதி பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இன்று (30.09.2023) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ – மதிசுத்தகர வெரஹெர வீதி வல்லஹா கொடவத்த முதியன்செல என்ற இடத்தில் வசிக்கும் மோனிகா நாம (62) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கால்வாய் அருகில் அவரது தோள் பை ஒன்றும், தேசிய அடையாள அட்டை திருடப்பட்டதாக முறைப்பாடு செய்த பற்றுச்சீட்டும் பழைய ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு நுகேகொட பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன சென்று பார்வையிட்டதுடன், சடலத்தை களுபோவில பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.