உள்நாட்டு செய்தி
தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைப்பு..!
எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டும்,
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம்,
பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அன்றைய தினம் சகல பீடங்களிலும் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் கண்காட்சிகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் நிகழ்வானது வரலாற்றில் முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் உள்ளடக்கிய ஒரு அமைப்பினையும் உருவாக்க இருப்பதாவும் தெரிவித்து இருந்தார்.