வானிலை
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
பப்புவா நியூ கினியாவின் கிழக்குப் பகுதியில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சுமார் 80 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கிழக்கு செபிக் மாகாணத்தில் சுமார் 100 கிலோமீற்றர் பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும், உயிர், உடைமை சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.