முக்கிய செய்தி
சீன பிரஜைகள் 39 பேர் கைது
இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நாடுகளில் மக்களை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இணைய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சீன பிரஜைகளை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.