உள்நாட்டு செய்தி
நந்திக்கடல் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை(01.10.2023) இடம்பெற்றுள்ளது.
மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
நந்திக்கடல் கட்டந்தோனியால் கோவிலுக்கு முன்னால் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.