Connect with us

Helth

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Published

on

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு புகை விசிறல் நடவடிக்கைகள் தொடரச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக டெங்கு தாக்கம் காணப்படும் இடங்களிலுள்ள வீடுகளுக்கு டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 212 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தெரிவித்துள்ளார்.