உள்நாட்டு செய்தி
தனிமைப்படுத்தல் தொடர்பாக வெளியான அதிரடி அறிவிப்பு

களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொத்துப்பிட்டிய 727 கிராமசேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பொசலேன் பிரதேசம் இசுறுமாவத்தை மற்றும் மக்கள் குடியிருப்பு தொகுதி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.