Connect with us

Uncategorized

டெங்கு ஆபத்துள்ள பகுதிகள்

Published

on

2022 ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும் , நாட்டில்  25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து 42 வீத டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

களுத்துறை மாவட்டம் 5 வீதம், கண்டி மாவட்டத்தில் இருந்து 10வீதம், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 வீதம், பதுளை மாவட்டத்தில் இருந்து 4 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பிலியந்தலை, ஹோமாகம, பிடகோட்டே, கொத்தடுவ, பியகம, திவுலப்பிட்டிய, கட்டான, மஹர, மீரிகம, களுத்துறை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, , மஹவெவ, மற்றும் வரக்காபொல  பிரதேசங்களில் உயர் அபாய நிலைகள் குறைந்துள்ளதுடன், நீர்கொழும்பு, பாணந்துறை, யட்டிநுவர, கரந்தெனிய, மன்னார், புத்தளம் உள்ளிட்ட  பகுதிகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், அதிகபட்ச நோயாளர்களின் எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் 11,364 ஆகவும், இரண்டாவது அதிக எண்ணிக்கையான நோயாளிகள் கம்பஹா மாவட்டத்திலிருந்து 7,803 ஆகவும் உள்ளனர். 

மேலும், கண்டி மாவட்டத்தில் 4,897 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3,435 பேரும், காலி மாவட்டத்தில் 3,273 பேரும், கேகாலை மாவட்டத்தில் 2,704 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2,681 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2,434 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 2,036 பேரும் பதிவாகியுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்து 2,000க்கும் குறைவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.