உள்நாட்டு செய்தி
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது நிலவும் இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டும் என கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அதன் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.
´இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் 2019 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட முத்தரப்பு உடன்பாட்டுக்கு அமைய குறித்த நாடுகளில் ஒத்துழைப்புடன் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என இந்திய அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது. இது குறித்த அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பலமுறை எங்களுக்குத் அறிவித்துள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு முன்பு, இலங்கை அமைச்சரவையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.