Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு

Published

on

பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு இலங்கை தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இவ்வருடம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இருதரப்பு உதவியின் பெறுமதி 4 பில்லியன் டொலர்கள்.

இது தவிர, இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களுக்காக இந்தியா சுமார் 3.5 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உதவுமாறு ஏனைய தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.