Connect with us

Uncategorized

1020 நாட்களுக்கு பிறகு 71 ஆவது சதம்

Published

on

ஆசிய கிண்ண T20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி தனது முதலாவது ரி20 சதத்தை பதிவு செய்தார்.

அவர் ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பெற்று 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதேவேளை விராட் கோலி 1020 நாட்களுக்கு பிறகு தனது 71 ஆவது சர்வதேச சதத்தை பூர்த்திசெய்தார்.

சதமடித்த விராட் கோலி, தனது சதத்தை மனைவிக்கும், மகளுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.