Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று 7 கொவிட் மரணங்கள், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயர்வு

Published

on

நேற்று (01) இலங்கையில் 826 கொரோனா தொற்;றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதில் 816 பேர் பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அதில் இதுவரை 58,075 பேர் குணமடைந்துள்ளனர்.

6,585 பேர் சிகிச்சை பெறுவதுடன், இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று எழுவர் கொவிட் நோயால் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்

• வத்தளை பகுதியில் வசித்த 75 வயதான பெண்
• நுகேகொட பகுதியை சேர்ந்த 69 வயதான ஆண்
• கொழும்பு இரண்டை சேர்ந்த 72 வயதான ஆண்
• உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்
• பொலன்னறுவை பகுதியில் வசித்த 39 வயதான ஆண்
• மடவல பகுதியில் வசித்த 73 வயதான பெண்
• கெலி ஓயா பகுதியில் வசித்த 77 வயதான ஆண்