உள்நாட்டு செய்தி
நீச்சல் குளத்தில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை பலி!

பெந்தோட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட வரஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று (28) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.
பெந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Continue Reading