இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க உபாதை அடைந்துள்ளதால் ஜெப்ரி வென்டசே அணிக்கு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி...
ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் அணிகள் ஆரோன் பின்ச் தலைமையிலும், டெஸ்ட் அணி பேட் கம்மின்ஸ் தலைமையிலும் இலங்கைக்கான சுற்றுத்தொடரில் கலந்து...
இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும், இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பங்களிக்க ஒப்புக்கொண்டார். இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...
பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் வைத்து அவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்களால் அவர் அடித்துக்...
இலங்கையின் முக்கிய பிரமுகர்களுடனான இருதரப்பு ஈடுபாடுகளைத் தொடர் இந்து, இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 5 ஆந் திகதி நிறைவு செய்தார். இந்த 3 நாள் விஜயத்தின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா சந்தித்தார். மாண்புமிகு பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட 4 அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைப்பதற்கான மெய்நிகர் ரீதியான அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நான்கு மாடிக் கட்டிடம், வடமராட்சி மகளிர் கல்லூரியில் ஒரு கேட்போர் கூடம், மாத்தளை, நுவரெலியா, பதுளை மற்றும் காலி மாவட்டங்களில் 1,035 கிராமசக்தி வீடுகள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் மெனிக் பண்ணையில் 24 வீடுகள் ஆகிய கட்டுமானங்களை உள்ளடக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவத்தில், வெளிநாட்டு அமைச்சர், கல்வி அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், தோட்ட வீட்டுவசதி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த அங்குரார்ப்பண வைபவத்தில், மக்களுக்கிடையிலான இணைப்புக்கள் எமது உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாவதுடன், அதன் விளைவாக 2021 அக்டோபர் 20ஆந் திகதி இடம்பெறவிருக்கும் குஷிநகருக்கான முதலாவது பௌத்த யாத்திரிகர்களின் விமானமானது, இந்தியா – இலங்கை உறவுகளில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் குஷிநகரில் உள்ள புதிய சர்வதேச விமான நிலையத்துடனான பௌத்த இணைப்பு முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது சிறந்ததொரு வாய்ப்பாகும் என வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா வலியுறுத்தினார். இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளருக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 2021 அக்டோபர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின் குடியரசுக் கட்டிடத்தில் நடைபெற்றதுடன், இதில் இரு நாடுகளும் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ...
இலங்கைக்கான நோர்வே இராச்சியத்தின் தூதுவர் ட்ரெய்ன் ஜொரான்லி எஸ்கெடல் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 ஆகஸ்ட் 30, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும்...
இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று (24) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக தனது...