Helth
கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிய இந்திய விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் குளிரூட்டப்பட்ட களஞ்சிய பகுதிக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாளை (29) முதல் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.
முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.
2 ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது.
அதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.