உள்நாட்டு செய்தி
கொவிட்டை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10 ஆம் இடம்
உலகில் வெற்றிகரமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு பத்தாம் இடம் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டு செயற்படும் லொவி என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளதுடன் கொவிட் பரவலை கட்டுப்படுத்த தவறிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இதோ அந்த பட்டியல்
1.நியூசிலாந்து
2.வியட்நாம்.
3.தாய்வான்
4.தாய்லாந்து
5.சைபிரஸ்
6.ரூவான்டா
7.ஐஸ்லாந்து
8.அவுஸ்திரேலியா
9.லித்வியா
10.இலங்கை.
கொவிட் பரவலை கட்டுப்படுத்த தவறிய நாடுகளின் பட்டியல்
1.பிரேசில்
2.மெக்சிகோ
3.கொலம்பியா
4.ஈரான்
5அமெரிக்கா
6.பொலிவியா
7.பனாமா
8.ஓமான்
9.யுக்ரென்
10.சிலி
இதேவேளை, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,694 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று 2 கொவிட் மரணங்கள் பதிவாகிய நிலையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது.