Helth
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது எப்போது?

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலைகளை மீள தியப்பதற்குரிய சுகாதார வழிக்காட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் அந்த சுகாதார வழிமுறைகள் தயாரித்து முடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வியமைச்சர் இதனை கூறினார்.