Helth
இராணுவத் தளபதி அறிவித்த விடயம்

மினுவங்கொடை மற்றம் மாத்தளை பொலிஸ் பிரிவுகளின் 05 பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
அதன்படி, மினவங்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மேற்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெஹிபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.