உள்நாட்டு செய்தி
மைத்திரிக்கு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) அழைப்பாணை (Notice) வௌியிட்டுள்ளது.
அருட்தந்தை சிறில் காமினி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஏசுதாசன் நடேசன் ஆகியோர் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் கவனக்குறைவு தொடர்பான தனிப்பட்ட மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.