Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரியின் எதிர்வு கூறல்

Published

on

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் புதிய முடிச்சு ஒன்றை இடுவதற்கு தயாராகியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று (01) வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு குறைந்தது இரண்டரை வருடங்கள் உள்ள நிலையில், அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு ஆட்சியை தக்கவைக்க முயல்வதாகவும் பெரும்பாலும் நாட்டில் அடுத்ததாக தேசிய தேர்தல் நடைபெறும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.