காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று குறித்த பகுதியில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க நியமிக்கபட்டுள்ளார். இந்த பேரவையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் அந்நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில்...
ஹட்டன் டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் நேற்று (09) மூன்று பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவிளங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவீன்...
அமெரிக்க ஓபன் தொடருக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து அவர் பேசுகையில், “வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல முடிவு செய்ய வேண்டிய...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.08 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.40 லட்சம் பேர்...
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடீ கேர்ட்சன் (Rudi Koertzen) வீதி விபத்தில் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது. தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கேர்ட்சனனுடன் மேலும்...
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்துள்ளது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது. கூட்டு ஒப்பந்தம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல்போனாதால், தொழில் அமைச்சு தலையிட்டது. அதன்பின்னர் சம்பள நிர்ணய சபை ஊடாக நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. இந்த முடிவை முதலாளிமார் சம்மேளனம் ஏற்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான மனு இன்று (09.08.2022) விசாரணைக்கு வந்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது என பாரத் அருள்சாமி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கும், காங்கிரசுக்கும் கிடைத்த வெற்றியாகும். அதேபோல தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என எவரும் நினைக்ககூடாது. வாழ்க்கை செலவுக்கேற்பவே சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து நாளைய தினம் (10) விசேட...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1000 ரூபா சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021 இல் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல்...