Connect with us

உள்நாட்டு செய்தி

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழை…

Published

on

தொடரும் கன மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிப்பதுடன் நீர்தேக்க கரையோர பிரதேசத்தில் நடமாடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான, கெனியன், கொத்மலை, மேல் கொத்மலை, நவ லக்ஷபான ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.