உள்நாட்டு செய்தி
அசாத் சாலி விடுதலை

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்