உலகம்
புதிய குடியரசு நாடானது பார்படோஸ்
கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவு பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், உலகின் மிக சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது.
குடியரசு நாடாக மாறினாலும், காமன்வெல்த் அமைப்பில் பார்படோஸ் தொடர்ந்து அங்கம் வகிக்கும்.
அந்தத் தீவு மக்கள்தொகையில் 91 சதவீதம் கறுப்பினத்தவர்கள் ஆவர்.
வெள்ளை இனத்தவர்கள் 4 சதவீதமும் இந்தியர்கள் 1 சதவீதமும் அங்கம் வகிக்கின்றனர்.