உள்நாட்டு செய்தி
தலவாக்கலையிலும் கேஸ் வெடித்தது

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் 01.12.2021 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.