உள்நாட்டு செய்தி
பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் கொடூர கொலை-100க்கும் அதிகமானோர் கைது

பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மேற்படி சம்பவத்தை எண்ணி வெக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது விரும்பதகாத செயல் எனவும் அதனை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார், இந்த கொடூர செயலில் தொடர்புடைய ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.