உள்நாட்டு செய்தி
JVP உறுப்பினர்கள் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் நாமல் கருணாரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை முதலாம் திகதி பொரலந்த நகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (07) வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.