Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சர் ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் கைது

Published

on

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் மற்றும் மற்றுமொரு குழுவினர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் பயன்படுத்திய வாகனம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளரின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் பயிற்றுவிப்பு வகுப்பு ஒன்றின் முன்னால் வந்த இளைஞர்கள் குழுவினால் இரண்டு மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.

இவர்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் 20 வயது மகனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த இராஜாங்க அமைச்சரின் மகனின் நண்பரின் காதலிக்கு குறித்த இரு மாணவர்களில் ஒருவர் காதல் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.