உள்நாட்டு செய்தி
பதவி விலக வேண்டியது நானா?சாகர காரியவசமா? மக்கள் தீர்மானிப்பர்:உதய கம்மன்பில
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் எழுத்து மூலமான அனுமதிக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை உயர்வு செய்யப்பட்டதை அமைச்சர் உதய கம்மன்பில முழுமையாக பொறுபேற்க வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று (12) தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
பதவி விலக வேண்டியது நானா அல்லது சாகர காரியவசமா என்று இந்நாட்டு அறிவார்ந்த மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.