முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள்ளார். அவரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
எந்தவொரு சந்தர்பத்திலும் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் (SLPP) முக்கிய கூட்டம் ஒன்று இன்று (08) களுத்துறையில் இடம்பெற்றது. “ஓன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்” என்ற தொனிப் பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம்...
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் நாட்டுக்கு வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில்...
தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எண்ணம் இல்லை என அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.