உள்நாட்டு செய்தி
இரு நாட்டு உறவுகள் பலப்படுத்தப்படும் – இம்ரான்கான்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காணப்படும் சமய மற்றும் காலாசார உறவுகளை மேலும் சக்திமிக்கதாய் பேண விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (23) மாலை இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்தாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.