உள்நாட்டு செய்தி
உயிர்த்த ஞாயிறு விசாரணை தடம்புரண்டுள்ளது – ஆயர்கள் சங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர் சங்கத் தலைவர் வின்ஸ்டன் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை கூறியுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மூலம் நியாயம் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்டுள்ள இறுதியறிக்கை கர்தினால் ஆண்டகையிடம் கையளிக்கப்பட வேண்டும். அதன் ஊடாக கத்தோலிக்க மக்களிடத்தில் காணப்படும் சந்தேகங்களை இல்லாமல் செய்ய முடியும். ஆகவே அந்த அறிக்கையை பேராயரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். தற்போதைய நிலையில் விசாரணை தடம்புரண்டுள்ளதா? என சந்தேகம் உள்ளது.”என்றார்.