உள்நாட்டு செய்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்:ஆயர்களும் கத்தோலிக்க பாராளுமனற உறுப்பினர்களும் கூடி எடுத்த முடிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்வரும் வாரம் முடிவெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மற்றும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
“இன்று ஆயர்கள், கிரிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி பல விடயங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக இந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கூடுதலாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தில் நாம் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நாட்டிலே நடக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி அடுத்த கூட்டத்திலே என்னனென்ன முடிவெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். என்றார்.