உள்நாட்டு செய்தி
இம்ரான் கான் இன்று மாலை நாட்டுக்கு வருகின்றார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இன்று மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கை வௌியிடவுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நாளை (24) ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.