மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாத தலைவர்களுக்கு அடுத்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அப்படியானால் மட்டுமே நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.