Connect with us

உள்நாட்டு செய்தி

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published

on

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் 13.2 மெகா வோட் நீர்மின் திட்டம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஸிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது.

இதனால் அங்குள்ள ரேனி கிராமத்தில் ரிஸகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் ரிஸ்கங்கா நீர்மின்நிலையம் முற்றிலுமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்றபோது அங்கு பணியாளர்கள் இருந்தார்களா? என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

100 முதல் 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தகவலை மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
கடினமான இந்த சமயத்தில் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஸா உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை 600 இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி அங்குள்ள நிலவரத்தை அறிந்துகொண்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதேவேளை இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரழந்நவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்நவர்களுக்கு அதாவது பாரிய காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கூறியுள்ளார்.